இந்தியா

கேரளாவில் நிபா: தீவிர கண்காணிப்பில் நோய் பாதித்த இளைஞரின் நண்பர், 2 செவிலியர்கள் 

ENS

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 23 வயது பொறியியல் கல்லூரி மாணவருக்கு நிபா என்னும் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டிருப்பது உறுதியான நிலையில், அவரும், அவரது நண்பர், அவருக்கு சிகிச்சை அளித்த 2 செவிலியர்களும் சிறப்புப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைரலாஜி ஆய்வுக் கூடம் இதனை உறுதி செய்துள்ளது. 

இதையடுத்து, இளைஞருடன் இருந்த அவரது நண்பரும், ஆரம்பத்தில் இளைஞருக்கு சிகிச்சை அளித்த இரண்டு செவிலியர்களும் சிறப்பு பிரிவில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பயப்பட ஒன்றும் இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட மருத்துவக் குழு நிலைமையைக் கட்டுக்குள் வைக்க தீவிரமாக போராடி வருகிறது என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார்.

இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர், திருச்சூருக்கு நண்பர்களுடன் சென்று, பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். 

இவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருப்பதால்,  அதன் மூலம் திருச்சூர், எர்ணாகுளம் பகுதியில் பரவியிருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் அவருடன் தங்கியிருந்தவர்களுக்கும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் தமிழக எல்லையில் தேனி மாவட்டத்தை ஒட்டி இருப்பதால், நிபா வைரஸ் தமிழக பகுதிக்கு பரவ வாய்ப்புள்ளதால் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை அமைத்து, தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிபா வைரஸ்: கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளத்தில் பல உயிர்களைப் பலி வாங்கிய நிபா வைரஸ் காய்ச்சல், பழம்தின்னி வவ்வால்களின் உமிழ் நீரில் பரவுவதாக தகவல் வெளியானது.

அப்போது தமிழக கேரள எல்லைப் பகுதியில் மூன்று இடங்களில் தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT