இந்தியா

ஹரியாணா முதல்வர், நடிகர் சிவகுமாராக மாறிய 'செல்ஃபி தருணம்'  (விடியோ இணைப்பு) 

ஹரியாணாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்    நடிகர் சிவகுமாராக மாறிய சுவையான நிகழ்வு நடந்துள்ளது. 

DIN

கர்னால் (ஹரியாணா): ஹரியாணாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்    நடிகர் சிவகுமாராக மாறிய சுவையான நிகழ்வு நடந்துள்ளது. 

ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அங்குள்ள கர்னால்  என்னும் இடத்தில்  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது  அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற இளைஞர் ஒருவர் உடனடியாக தனது கையில் இருந்த செல்போன் மூலம் கட்டாருடன் செல்ஃபி  எடுக்க முயன்றார்.

இதனால் ஆவேசமான கட்டார் அந்த இளைஞரின் கையிலிருந்த  செல்போனைத் தட்டி விட்டார் இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

அவரது இந்த செய்கையானது நடிகர் சிவகுமார் தமிழகத்தில் பொது இடத்தில்  தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்கள் இருவரின் செல்போனைத் தட்டி விட்டதை நினைவுபடுத்தியது.

ஆனால் கட்டாரோ இதற்கு முன்பாகவும் ஊடகங்கள் முன்னிலையில் பொதுமக்களிடமும், தன்னிடம் கேள்வி  கேட்ட பத்திரிகையாளரிடமும் ஆத்திரமாக பேசிய வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

SCROLL FOR NEXT