முகப்பு
இந்தியா

தீயில் கருகி நாசமான சொகுசுப் பேருந்து: நொடிப்பொழுதில் உயிர்தப்பிய பயணிகள்

தனியார் சொகுசுப் பேருந்து முழுவதும் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:05 AM
பகிர்:

தனியார் சொகுசுப் பேருந்து முழுவதும் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது. 20 பயணிகளுடன் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தின் கர்ணூல் மாவட்டம் அடுத்துள்ள எணுகுமர்ரி என்ற கிராமத்தை கடந்து கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னதாக, பின் இருக்கையில் இருந்த பயணிகள் தீயில் கருகும் வாசம் வருவதாக ஓட்டுநரிடம் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சோதனை செய்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிலிருந்த 20 பயணிகளும் உடனடியாக வெளியேறினர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அதற்குள்ளாக பேருந்து முழுவதும் தீ மளமளவெனப் பரவியது. 

Advertisement

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள்ளாக அந்தப் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. பயணிகளின் உடமைகளும் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments