இந்தியா

ஆந்திராவின் ஐந்து துணை முதல்வர்களில் ஒருவராகிறாரா பிரபல நடிகை? 

ஆந்திர மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளபடி நியமிக்கப்பட உள்ள 5 துணை முதல்வர்களில் பிரபல நடிகையும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளபடி நியமிக்கப்பட உள்ள 5 துணை முதல்வர்களில் பிரபல நடிகையும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட 5 சமுதாயத்துக்கும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் ஆந்திராவில் 5 பேரை துணை முதல்வர்களாக நியமிக்க முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்திருப்பதாக வெள்ளி மதியம் தகவல்கள் வெளியாகின.

ஒட்டுமொத்த மாநிலமும் அரசின் செயல்பாடுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசின் நிர்வாகச் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

அதன்படியே  5 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் 24 பேர் என நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நியமிக்கப்பட உள்ள 5 துணை முதல்வர்களில் பிரபல நடிகையும் ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜாவும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து குண்டூர் மாவட்டம் தடேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கட்சித் தலைவர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்துகிறார்.

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT