மழை வேண்டி கர்நாடக மாநிலத்தில் நடந்த விநோத திருமணம் (பிரத்யேக விடியோ)
கர்நாடக மாநிலம் உடுப்பியில் மழைக் கடவுளான வருண பகவானை மகிழ்விக்கும் வகையில் ஒரு விநோத திருமணம் நடைபெற்றுள்ளது.
உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பியில் மழைக் கடவுளான வருண பகவானை மகிழ்விக்கும் வகையில் ஒரு விநோத திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் இன்று தொடங்கியுள்ளது. இது படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் பரவும்.
ஆனால் அதுவரை காத்திருப்பானேன்? கர்நாடக மாநிலம் உடுப்பியில் வருண பகவானைக் குளிர்விக்கும் வகையில் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
Advertisement
மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட தவளைகளுக்கு கழுத்தில் மலர் மாலை அணிவித்து, இந்து முறைப்படி தாலி கட்டும் வைபவமும் நடைபெற்றது. இந்த திருமண விடியோ ஏஎன்ஐயில் வெளியாகியுள்ளது.