இந்தியா

குடும்பத்தினரை கத்தியால் குத்திய பின்னர் 'பேஸ்புக் லைவ்' போட்ட  இளைஞர்! 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கத்தியால் குத்திய பின்னர், நிதானமாக 'பேஸ்புக் லைவ்' செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

IANS

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கத்தியால் குத்திய பின்னர், நிதானமாக 'பேஸ்புக் லைவ்' செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தில் உள்ள கியோட்டா சப்தாலா என்ற இடத்தில் இந்த்ரநில் ராய் என்ற இளைஞர்தான் இந்த கொடும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்கில் விசாரணை செய்துவரும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அந்த இளைஞர் ஞாயிறு இரவு தனது குடும்பத்தினரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவரது பாட்டியான ஆரத்தி ராய் (80) காயங்களினால் மரணமடைந்து விட்டார். சிறிய அள்வு காயமடைந்த அவரது பெற்றோர்கள் தற்போது நலமாக உள்ளார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் 'பேஸ்புக் லைவ்' செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து    வருகிறோம்.

அந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் போதைக்கு அடிமையானவர் என்பதும், சமீப காலமாக அவர் வன்முறையான மனநிலையுடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

ஆம்பூர் கலவர வழக்கு: ஆக. 28 -க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

SCROLL FOR NEXT