இந்தியா

வாயு புயல்: பாதுகாப்பான இடத்துக்கு மக்களை கொண்டு செல்லும் பணியை துவக்கியது குஜராத் அரசு

ENS

அகமதாபாத்: அரபிக் கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் நாளை காலை கரையைக் கடக்கும் என்பதால், கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணி துவங்கியது.

சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களில் இருந்து சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

வாயு புயலானது அதி தீவிர புயலாக மாறி நாளை காலை வெரவால் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாயு புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT