முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ஆம் தேதியை "தேசிய மாணவர் தினமாக' அறிவிக்க வேண்டும் என தெலங்கானாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்கிற்கு, பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த் பாஸ்கர் ரபோலு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐ.நா.சபை அக்டோபர் 15ஆம் தேதியை ஏற்கெனவே உலக மாணவர்கள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
அப்துல் கலாமின் பிறந்த தினத்தை அக்டோபர் 15-ஆம் தேதியை "தேசிய மாணவர் தினமாக' அறிவிக்க விரைவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, பல்வேறு கல்வி நிறுவனங்களும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், அவரது பிறந்த தினத்தை தேசிய மாணவர் தினமாக அறிவித்து கொண்டாடுவதன் மூலம், ஏவுகணை மனிதர் என்று போற்றப்படும் கலாமின் கனவுகளை நனவாக்கவும், மாணவர்களின் மனதில் அவரைப் பற்றிய நினைவுகளை ஏற்றி வைக்கவும் வாய்ப்பாக அமையும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.