இந்தியா

அமெரிக்க - சீன வர்த்தகப் போரால் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு: வர்த்தகத் துறை

DIN

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, அந்த இரு நாடுகளுக்கும் சுமார் 350 வகையான இந்தியப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறி, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்து வருகிறது. அதற்குப் பதிலடியாக, சீனாவும் அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்து வருகிறது. இதன் காரணமாக, இந்த இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான ஏராளமான பொருள்களை ஏற்றுமதி - இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அந்த இரு நாடுகளின் இறக்குமதித் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியப் பொருள்கள் குறித்த ஆய்வை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் மேற்கொண்டது.
அந்த ஆய்வின்படி, சீனாவிடமிருந்து அமெரிக்கா இதுவரை வாங்கி வந்த டீசல், எக்ஸ்-ரே குழாய்கள், குறிப்பிட்ட ரசாயனப் பொருள்கள் என 151 பொருள்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், ரப்பர், கிராஃபைட், எலக்ட்ரோடுகள் போன்ற 203 பொருள்களை அமெரிக்காவுக்குப் பதில் இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும்.
அமெரிக்கா மற்றும் சீனச் சந்தைகளை அணுகும் திறனை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தகப் போரால் ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாகக் கூடிய இந்தியப் பொருள்கள் கண்டறியப்பட்டன.
சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதால் அந்த நாட்டுடன் இந்தியாவுக்கு இருக்கும் 5,012 டாலர் (சுமார் ரூ.3.5 லட்சம் கோடி) வர்த்தகப் பற்றாக்குறை குறையும் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT