இந்தியா

வேட்பு மனுவில் தவறான தகவல்: எம்.பி மீது வழக்குப் பதிவு 

DIN

லக்னௌ: நாடாளுமன்றத் தேர்தலின் போது வேட்பு மனுவுடன் போலியான ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் கோசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதுல் ராய். தன்னை பாலியல்ரீதியாக தாக்கினார் என கல்லூரி மாணவி ஒருவர் இவர் மீது அளித்த புகாரை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக  சனிக்கிழையன்று  வாரணசி நீதிமன்றத்தில் ஆஜரான அவரை நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது வேட்பு மனுவுடன் போலியான ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், அதுல் ராய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அதுல ராய் தன்மீதான  வழக்குகளை குறைத்து தெரித்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிராக மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 13 வழக்குகள்தான் உள்ளது என வேட்பு  மனுவில்  குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலியான ஆவணங்களை சமர்பித்ததாக அதுல்ராய்க்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT