இந்தியா

கூட்டணி அரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது:  மல்லிகார்ஜுன் கார்கே

DIN


 கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய  அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
கலபுர்கியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என  முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெகெளடா  அண்மையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்குப் பதில் கூற விரும்பவில்லை.  காங்கிரஸ், மஜத கட்சிகளின் பரஸ்பர ஒப்புதலுடன் கூட்டணி அமைத்து,  ஆட்சியைப் பிடித்தது.  இதற்கு இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததை மறுக்க முடியாது. 
இரு கட்சியினரும் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆனால் ஒரு சிலர், கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படாமல் செயல்படுவது வேதனை அளிக்கிறது.  இதனை கட்சியின் மேலிட கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இரு கட்சிகளிலும் ஒன்றிணைந்து கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நேரத்தில், கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் எனக் கூறுவது முறையல்ல என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT