இந்தியா

சந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் 

DIN

விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாபஸ் பெற்றுள்ளார். 

ஆந்திராவில் சமீபத்தில்நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து, தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

அதன் முதல்படியாக சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில், பொதுமக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு அரங்கை, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி இடிப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி திங்களன்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோஷேசுக்கு அளிக்கப்பட்டு வந்த 'இசட்' பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக செவ்வாயன்று அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT