இந்தியா

ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே இந்தியாவின் மிக் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து 

ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே இந்திய விமானப் படையின் 'மிக்' வகை விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

DIN

ஜெய்ப்பூர்   ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே இந்திய விமானப் படையின் 'மிக்' வகை விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே அமைந்துள்ள மாவட்டம் பிகானீர். இங்கு வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் 'மிக்' வகை விமானம் ஒன்று மதியம் திடீரென்று நொறுங்கி விழுந்து விபத்துக்குளானது.

இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டு மையத்துடன் கடைசியாகத் தொடர்பு கொண்டு தெரிவித்த தகவலின்படி, விமானமானது தொழில்நுட்பக்க கோளாறின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது தெரிய வருகிறது.

இதனையடுத்து விமானிகள் உடனடியாக அதிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து விமானிகள் இருவரும் வெளியேறியுள்ளனரா அல்லது ஒருவர் மட்டுமா என்பது சம்பவ இடத்திற்கு தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

உள்ளூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT