ஆளுங்கட்சியே இப்படி செய்யலாமா? போஸ்டரால் வெடிக்கும் சர்ச்சை
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதத்துக்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. கோடை வெயிலோடு தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தியாஆளுங்கட்சியே இப்படி செய்யலாமா? போஸ்டரால் வெடிக்கும் சர்ச்சை
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதத்துக்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. கோடை வெயிலோடு தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
புது தில்லி: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதத்துக்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. கோடை வெயிலோடு தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் ஒட்டியிருக்கும் போஸ்டரால் சர்ச்சை வெடித்துள்ளது.
தேர்தல் நெருங்கவிருந்த நிலையில், புல்வாமா தாக்குதலும், அதன் எதிரொலியாக இந்திய விமானப் படையினர், பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்திய அதிரடித் தாக்குதலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உருவாகி, பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் விடுதலையால் ஓரளவுக்கு தணிந்தது.
போர் வேண்டாம் என்று நினைத்த பொதுமக்களுக்கு, அபிநந்தன் விடுதலை பெரிய ஆறுதலை அளித்தது. அதே சமயம் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவான நிலையில் அது பற்றி தொடர்ந்து பாஜகவினர் பேசி தேர்தல் பிரசாரக் களத்தில் பட்டையைக் கிளப்பி வந்தனர்.
அதோடு நிற்காமல், ஒருபடி மேலே சென்று பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் அதிரடித் தாக்குதல், விங் கமாண்டர் அபிநந்தன், மிக் 21 விமானம் போன்றவற்றை தங்களது பிரசாரப் போஸ்டரில் அச்சடித்துள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளதோடு, இதுபோன்ற போஸ்டர்களுக்குத் தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
நாட்டுக்காக போராடும் வீரர்களின் புகைப்படங்களை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாமா? இதனை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா என்று கேள்விகள் கேட்டு சமூக வலைத்தளங்களில் கருத்துகளும் பதிவிடப்படுகிறது.