இந்தியா

டிஜிபிக்களை நியமிக்க காலவரம்பை மாற்றி அமைத்தது உச்ச நீதிமன்றம்

DIN


புது தில்லி: நாடு முழுவதும் காவல்துறை டிஜிபிக்களை நியமிப்பதற்கான காலவரம்பை மாற்றி அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு 6 மாதம் பணிக்காலம் இருந்தாலும், பணி மூப்பு அடிப்படையில் அவர்களை காவல்துறை டிஜிபியாக நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஓய்வு பெற 6 மாதக் காலம் மட்டுமே இருப்பதால் டிஜிபி பதவி பறிபோகும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 2 ஆண்டு பணிக்காலம் உள்ளவரையே டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பது நடைமுறையில்  இருந்தது.

தமிழகம் மற்றும் மாநில  அரசுகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதே சமயம், டிஜிபிக்களை யார் நியமிப்பது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகையில், மாநில அரசு சுயமாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது. மாநில அரசுகள் பரிந்துரைப்பதன் அடிப்படையில் யுபிஎஸ்இ மட்டுமே டிஜிபிக்களை நியமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT