இந்தியா

மாயாவதியுடன் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகர் அமைத்த தேர்தல் கூட்டணி   

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகர் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்.

DIN

ஹைதராபாத்: நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகர் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்.

ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரான பவன் கல்யாண், ஜனசேனா என்னும் கட்சியையும் நடத்தி வருகிறார். அவர் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் கவனம் செலுத்துகிறது. இதற்கான கூட்டணி அறிவிப்பு லக்னௌவில் வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு மாயாவதி பேசும் போது கூறியதாவது:

ஆந்திர மாநில மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தலிலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். புதியவர்கள் அரசாள வரவேண்டும் என்பதே  மக்களின் ஆர்வமாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனசேனா மற்றும் பிற பிராந்திய கட்சிகளுடன் நாங்களும் இணைந்து போட்டியிடுகிறோம் ஆந்திர மாநில முதல்வராக பவன் கல்யாண் வர வேண்டும்

இதற்கு பதிலளித்து பவன் கல்யாண் பேசும்போது, 'நீங்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும்' என்று மாயாவதியிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

SCROLL FOR NEXT