காஷ்மீர் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலியாகி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் சனிக்கிழமை மாலை பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலியாகி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக அவர் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரழந்த வீரர்களின் எணிக்கை 2 ஆகா உயந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.