இந்தியா

எதிர்க்கட்சிகள் சொல்வது போலச் செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்: தேர்தல் ஆணையம் 

DIN

புது தில்லி: எதிர்க்கட்சிகளின் கோரியுள்ளபடி வாக்குப்பதிவு இயந்திரங்களில்  50% ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடைமுறைகளை அமல் செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

மக்களவைத் தேர்தலில், முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று கோரி காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம், லோக்தந்திரிக் ஜனதா தளம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மக்களவைத் தொகுதியில் ஒரு பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், பேரவைத் தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு அலுவலர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரியுள்ளபடி வாக்குப்பதிவு இயந்திரங்களில்  50% ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடைமுறைகளை அமல் செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (29-3-19) அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 50 பக்க பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு லோக்சபா தொகுதி அல்லது சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கும் நடவடிக்கை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை 6 நாட்கள் கூடுதலாக்கும்.

தற்போது நம்பகத்தன்மை அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்-ஒப்புகைச் சீட்டு  துல்லியத்தன்மை 99.99% உள்ளது. ஆகவே இதில் கூடுதலாக ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கும் நடைமுறையைச் சேர்ப்பதால் நம்பகத்தன்மை பெரிய அளவில் அதிகரித்து விடாது

மாதிரி ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடவடிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம்  மட்டுமே செய்ய முடியும். அதற்கு அறிவியல் பூர்வமான தர்க்கமோ, புள்ளிவிவர அடிப்படையோ இல்லை.  இன்னும் சொல்லப்போனால் அது ஒரு விரயமான செயல்.

ஆகவே ஒப்புகைச் சீட்டை அதிகரிப்பதென்பது தேர்தல் அதிகாரிகளுக்கு அதிக பயிற்சியைக் கோரும் ஒரு செயலாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT