இந்தியா

தேர்தலில் இதெல்லாம் சாதாரணமப்பா: மோடியும், ராகுலும் பக்கத்து வீட்டுக்காரர்கள்!

பெயரில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நாடகங்களுக்குச் சொந்தக்காரரான பெயர் பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர்.

ENS


ராய்ப்பூர்: பெயரில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நாடகங்களுக்குச் சொந்தக்காரரான பெயர் பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர்.

ரோஜா மலரை வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது சுகந்தமான நறுமணத்தையே அளிக்கும் என்று அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மையல்லவா?

சரி பெயரைப் பற்றி ஏன் இந்த அளவுக்கு மொக்கைப் போடுகிறீர்கள், உங்கள் மொக்கைக்கு ஏன் ஷேக்ஸ்பியரை எல்லாம் உதவிக்கு அழைக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது இங்கே நன்றாகவே தெரிகிறது. காரணம் நீங்கள் மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாகவே சொல்லி விட்டீர்கள்.. 

முறைக்காதீர்கள்.. நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுகிறோம்.. நமக்குள் சண்டை வேண்டாம்.

நீங்கள் நம்பினால் நம்புங்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 3 வாக்காளர்களின் பெயர்கள் நரேந்திர மோடி என்று பதிவாகியுள்ளது. பிலாஸ்புர், துர்க் நகர், சக்தி ஆகிய மூன்று பகுதிகளில் நரேந்திர மோடி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இது மட்டுமா, அதே பகுதியில்  அரை டஜன் ராகுல் காந்திக்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களை எல்லாம் விஞ்சும் வகையில் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல் பெயரைக் கொண்ட 19 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான். இவர்களில் பெரும்பாலானோர் மேற்கண்ட அதே பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்.  

அந்த 19 பேரில் ஒருவரான புபேஷ் பாகெல், என் பெயரை யாரிடமாவது சொன்னால் அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். மாநிலத்தின் முதல்வரை பெயரை வைத்திருப்பதால் என்கிறார்.

சத்தீஷ்கர் மாநிலம் படன் தொகுதியில் முதல்வர் புபேஷ் பாகல் பெயர் வாக்காளர் பதிவேட்டில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் கண்டது மோடி, ராகுல் என இவர்கள் எல்லாம் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்களாகக் கூட இருக்கலாம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT