முகப்பு
இந்தியா

குடிபோதையில் விபத்து: இலங்கை கிரிக்கெட் கேப்டன் கைது

குடிபோதை காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் திமித் கருணரத்னே, ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்ப்டடார். 

Updated On : 31 மார்ச், 2019 at 4:14 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:01 PM

குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய காரணத்தால் இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் திமித் கருணரத்னே, ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 5:40 மணிக்கு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் இலங்கை போலீஸார் கருணரத்னேவை கைது செய்தனர். இந்த விபத்து காரணமாக மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், திமித் கருணரத்னே பிணையில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வரும் வாரத்துக்குள்ளாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் இந்த நடவடிக்கைகள் காரணமாக நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், திமித் கருணரத்னே மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சரியான கேப்டன் அமைவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் திமித் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி அசத்தல் வெற்றிகளுடன் தொடரை கைப்பற்றியது.

மேலும் ஒருநாள் அணிக்கும் நீண்டகால அடிப்படையில் திமித் கருணரத்னேவை கேப்டனாக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.