இந்தியா

நாட்டுப்பற்றெல்லாம் சினிமாவுக்குத்தான்: ஓட்டுப் போடாமல் பிரபல நடிகர் டிமிக்கி 

IANS

மும்பை: ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் எல்லாம் செய்த பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தேர்தலில் ஓட்டுப் போடாமல் தவிர்த்த சம்பவம் கேலிக்குள்ளாகியிருக்கிறது   

பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் நடிகர் அக்ஷய் குமார். தான் நடித்த கேசரி, பேபி, ஹாலிடே மற்றும் ஏர்லிப்ட் ஆகிய படங்களின் மூலமாக பாலிவுட்டில் தேசபபற்று படங்களின் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.   

அத்துடன் நாட்டின் மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக முழுமையான வாக்களிப்பை வலியுறுத்தி பிரதமர் மோடி ட்விட்டரில் 'டேக்' செய்து விழிப்புணர்வு பதிவிட்ட ஒருசில பாலிவுட் நடிகர்களில் அக்ஷயும் ஒருவர்.    

அதை அங்கீகரிக்கும் விதமாக "ஜனநாயகத்தின் உண்மையான அடையாளம் என்பது தேர்தல் செயல்பாடுகளில் பொதுமக்கள் பங்கேற்பதுதான்" என்று அக்ஷய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சமீபத்தில் பிரதமர் மோடியுடன் இவர் நடத்திய உரையாடல் என்பது தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது.

ஆனால் கடந்த திங்களன்று மஹாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அக்ஷய் பங்கேற்று வாக்களிக்கவில்லை. 

இது பலத்த சர்ச்சையானதுடன் அக்ஷய் சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.          

செவ்வாயன்று மும்பையில் நடைபெற்ற திரைப்படம் தொடர்பான நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவரிடம், இதுகுறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் அக்ஷயோ "போகலாம் போகலாம்" என்று கூறியவாறே அவரது கேள்விக்குப் பதில் சொல்லாமல் வெளியே சென்று விட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT