முகப்பு
இந்தியா

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 15 பாதுகாப்பு படையினர் பலி: மோடி கண்டனம்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில்  பொதுமக்களில் ஒருவர், 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

Updated On : 1 மே, 2019 at 3:08 PM
பகிர்:


புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில்  பொதுமக்களில் ஒருவர், 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தாக்குதலை ஒருகாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் உயிரிழந்த தைரியமான வீரர்களுக்கு எனது சல்யூட். அவர்களது தியாகம் ஒரு போதும் வீண் போகாது, தியாகத்தை மறக்கவும் முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.