இந்தியா

தேர்தல் பிரசாரத்துக்கு சிறார்களை பயன்படுத்தியதாக பிரியங்காவுக்கு நோட்டீஸ்

DIN


சிறார்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவுக்கு தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரியங்காவுக்கு எதிராக புகார் யார் தெரிவித்தது அல்லது புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பிரியங்கா முன்பு சிறார்கள் நின்றுகொண்டு கடுஞ்சொற்களை பிரயோகிப்பது போன்ற விடியோவை என்சிபிசிஆர் குறிப்பிட்டுள்ளது.
நோட்டீஸில், சிறார்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி இதுதொடர்பாக மும்பை உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதையும் அந்த ஆணையம் நோட்டீஸில் மேற்கோள்காட்டியுள்ளது.
மேலும், 3 தினங்களுக்குள் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் குறித்த விவரங்கள், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் பெயர்கள் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT