முகப்பு
இந்தியா

மோடிக்கு இதெலாம் தெரியாதா?: பட்டியல் போடும் ப.சிதம்பரம் 

பிரதமர் மோடிக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியாதா என்று முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் ட்விட்டரில் பட்டியல் போட்டு விமர்சித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:

சென்னை: பிரதமர் மோடிக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியாதா என்று முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் ட்விட்டரில் பட்டியல் போட்டு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாகஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ள கேள்விகளாவது:

போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறவே ஆதாரமற்றவை என்று டெல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அன்றைய பாஜக அரசு முடிவெடுத்தது திரு மோடி அவர்களுக்குத் தெரியாதா?

இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற முதுமொழி பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

தேர்தலில் தம்முடைய கட்சியின் தோல்வி உறுதி என்ற அச்சம் திரு மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →