இந்தியா

1200 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி நடவடிக்கைகள் மதிப்பாய்வு: 10 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு வழங்க பரிந்துரை

DIN


பணியில் சிறப்பாக செயல்படாதவர்களை கண்டறிவதற்காக, சுமார் 1200 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணிதிறன் மற்றும் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் மதிப்பாய்வு செய்துள்ளது. அதன் மூலம் 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
பணியில் திறம்பட செயல்படாதவர்களை கண்டறிய, ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி நடவடிக்கைகள் குறித்த தகவலை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகளின் பணித்திறன் நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 
கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை சுமார் 1,181 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணித்திறன் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் திறம்பட செயல்படவில்லை என்று கண்டறியப்பட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர் செயல்முறை என்பதால், ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். 1958-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அகில இந்திய குடிமைப்பணிகள் விதிகளின் படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இந்த விதிப்படி, திறம்பட செயல்படாத அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கலாம். 
அதிகாரிகளின் பணி நடவடிக்கைகள் அடிக்கடி இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதால், சிறப்பாக செயல்படுபவர்கள், செயல்படாதவர்களை கண்டறிய முடிகிறது. திறம்பட செயல்படாதவர்களுக்கு, முதலில் அதுகுறித்து அறிவுறுத்தப்படும். 
அதன்பின்னரும் அவர்கள் தொடர்ந்து பணி நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படாவிட்டால் அவர்களுக்கு 3 மாத ஊதியத்தை அளித்து விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. 
திறம்பட செயல்படுபவர்கள், ஊக்குவிக்கப்பட்டு அவர்களுக்கேற்ற பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறினார்.
கடந்த 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 1, 143 ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வு இறுதியில், திறம்பட செயல்படாத காரணத்துக்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT