இந்தியா

'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள்: முதல்முறை வாக்காளர்களை எச்சரித்த மோடி 

'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள் என்று முதல்முறை வாக்காளர்களை தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

IANS

ஆஸம்கார்: 'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள் என்று முதல்முறை வாக்காளர்களை தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆஸம்காரில் வியாழனன்று தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள்  கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

'கிச்சடி' போன்று உருவாக்கப்படும் கூட்டணி அரசுகளிடம் கவனமாக இருங்கள். இத்தகைய அரசுகள் அராஜகத்தையும் நிலையற்ற தன்மையையும் கொண்டு வந்து சேர்க்கும்.

இருபது வருடங்களுக்கு முன்பாக ஐக்கிய முன்னணி அரசானது நிலையற்ற தன்மையையும் ஆட்சிக் காலத்திற்கு முன்பே தேர்தல்களையும் கொண்டு வந்தது.  

அதேபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது தனது தொடர் ஊழல்களால் இந்தியாவே அவமானத்தில் தலைகுனியும்படி செய்தது. அத்தகைய அரசுகள் சவால்களை எதிர்கொள்ள இயலாதவை.

எனது அரசானது எப்போதும் தனிப்பட்ட நலனை விட தேசத்தின் நலனையே முன்னிறுத்தி செயல்பட்டுள்ளது.

அதேபோல் மக்களுக்கான பல்வேறு பொது நலத் திட்டங்களை முன்னெடுக்கும் போது எனது அரசானது, ஜாதி அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது கிடையாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT