இந்தியா

ஆறாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல்: நண்பகல் 12 மணி வாக்குப்  பதிவு நிலவரம் 

DIN

புது தில்லி: ஞாயிறன்று நடைபெற்று வரும் ஆறாவது கட்ட நாடாளுமன்ற தேர்தலில், நண்பகல் 12 மணி வாக்கு பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.

நாடுமுழுவதும் எழுகட்டங்களாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் ஞாயிறன்று ஆறாவது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது.

இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 59 தொகுதிகளில் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 45 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம், லோக்ஜனசக்தி ஆகியவை தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி, இந்திய தேசிய லோக்தளம் ஆகியவை தலா ஒரு இடத்தையும், திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.

காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறும். தேர்தல் நடக்கிற 7 மாநிலங்களில் பாதுகாப்பு பணியில்  அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்று வரும் ஆறாவது கட்ட நாடாளுமன்ற தேர்தலில், நண்பகல் 12 மணி வாக்கு பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு (சதவீதத்தில்):

பீகார் 20.70, அரியானா 23.26, மத்திய பிரதேசம் 28.25, உத்தர பிரதேசம் 21.75, மேற்கு வங்காளம் 38.26, ஜார்க்கண்ட் 31.27, டெல்லி 19.55. 

12 மணிவரை சராசரி வாக்கு சதவீதம் 25.13 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT