இந்தியா

ராகுலை காட்டிலும் மோடிக்கு முன்னுரிமையா? தொலைக்காட்சி சேனல்கள் குறித்து புதிய தகவல்

DIN


ஏப்ரல் 1 முதல் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்பான விஷயங்களை காட்டிலும் பிரதமர் மோடி தொடர்பான விஷயங்கள் 3 மடங்கு அதிகமாக ஒளிபரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) வெளியிட்டுள்ள தகவலில், ராகுல் காந்தியை காட்டிலும் பிரதமர் மோடி தொடர்பான விஷயங்களையே தொலைக்காட்சி சேனல்கள் அதிகம் ஒளிபரப்பியுள்ளது தெரியவந்துள்ளது. 

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மோடி தொடர்பான விஷயங்கள் 722 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதேசமயம், ராகுல் காந்தி தொடர்பான விஷயங்கள் வெறும் 252 மணி நேரம் தான் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 

இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 65 பிரசாரங்களை மேற்கொண்டார். ஆனால், பிரதமர் மோடி அதைவிட 1 எண்ணிக்கை குறைந்து 64 பிரசாரங்களையே மேற்கொண்டுள்ளார். எனினும், பிரதமர் மோடி தொடர்பான விஷயங்கள் ராகுல் காந்தியை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.  

இதேபோன்று, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடர்பான விஷயங்கள் சுமார் 124 மணி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதேசமயம், பிரியங்கா காந்தி தொடர்பான விஷயங்கள் 84 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தொடர்பான விஷயங்கள் தொலைக்காட்சிகளில் 85 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியை அதிகளவில் காண்பிப்பதன் மூலம் தங்களுக்கு தேவையான டிஆர்பியை தொலைக்காட்சி சேனல்கள் அடைவதாக தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT