முகப்பு
இந்தியா

பிரதமர்  மோடியே உலகின் மிகச் சிறந்த நடிகர்: சொல்கிறார் பிரியங்கா

பிரதமர் நரேந்திர மோடிதான் உலகின் மிகச் சிறந்த நடிகர் என்று உத்தரப்பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:


மிர்ஸாபூர்: பிரதமர் நரேந்திர மோடிதான் உலகின் மிகச் சிறந்த நடிகர் என்று உத்தரப்பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.

மிர்ஸாபூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, உலகிலேயே மிகச் சிறந்த நடிகரான நரேந்திர மோடியை நீங்கள் பிரதமராக தேர்வு செய்தீர்கள். அதற்கு பதிலாக அமிதாப் பச்சானையே தேர்வு செய்திருக்கலாம். யாராக இருந்தாலும் உங்களுக்கு ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள் என்று பிரியங்கா கூறினார்.

மே 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், பிரதமர் மோடி குறித்து பிரியங்கா புதிய விமரிசனத்தை முன் வைத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.