இந்தியா

கொட்டிய மழையால் தில்லியில் தணித்தது வெப்பம்

DIN

தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதி ஆகியவற்றில் கடந்த இரண்டு நாள்களாகப் பரவலாகப் பெய்த மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்திருந்தது. 

தில்லி, என்சிஆா் பகுதிகளான காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் கடும் வெப்பம் நிலவியது. அனல் காற்று வீசியதால் பாதசாரிகள், வாகனம் ஓட்டுவோா் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா். இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரில் ஆங்காங்கே பரவலாக லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 24.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. அன்று இரவு தலைநகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலையில் இதமான வானிலை நிலவியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT