இந்தியா

இந்த தேர்தலில் நமது தாய்மார்கள், சகோதரிகளின் பங்கு அளப்பரியது: ராகுல் பெருமிதம்

IANS

நடப்பு மக்களவைத் தேர்தலில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பங்கு அளப்பரியது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பெருமிதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டதாவது:

இன்றுடன் 7-ஆவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் நமது தாய்மார்களும், சகோதரிகளும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். வேட்பாளர்களாக மட்டுமல்லாமல் வாக்காளர்களாகவும் சிறப்பித்துள்ளனர். பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அதனுடன் பெண்களை போற்றும் விதமாக காங்கிரஸ் வெளியிட்ட விடியோப் பதிவையும் இணைத்துள்ளார். 

அதில், பெண்கள் தங்களின் வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்தும், இருதரப்புக்குமான சம வாய்ப்பு தொடர்பாகவும் பேசுகின்றனர். புதிய யோசனைகள், புதிய தலைவர்கள், புதிய அரசியல் முறை தொடர்பாக விருப்பம் தெரிவிக்கின்றனர். 

மேலும் நடப்பு தேர்தலின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT