இந்தியா

இணையதள அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.53 கோடி செலவு: முதலிடத்தில் பாஜக

DIN

கடந்த 4 மாதங்களில் முகநூல், கூகுள் போன்ற வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களை மேற்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் ரூ.53 கோடி செலவிட்டுள்ளன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த மாதம் 15-ஆம் தேதி வரையிலான கால அளவில், தங்களது வலைதளத்தில் அரசியல் கட்சிகள் 1.21 லட்சம் தேர்தல் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், அதற்காக ரூ.26.5 கோடி செலவிடப்பட்டதாகவும் முகநூல் விளம்பர தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கூகுள், யூடியூப் மற்றும் அந்த நிறுவனம் தொடர்புடைய மற்ற வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்காக அரசியல் கட்சிகள் ரூ.27.36 கோடி செலவிட்டுள்ளன.
அந்த வலைதளங்களில் 14,837 தேர்தல் விளம்பரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன.
கட்சிகளைப் பொருத்தவரை, ஆளும் பாஜகதான் மிக அதிக தொகையில் முகநூல் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அந்த சமூக வலைதளத்தில் பாஜக வெளியிட்டுள்ள விளம்பரங்களின் எண்ணிக்கை 2,500-க்கும் அதிகமாகும்.
தேர்தல் விளம்பரங்களுக்காக சமூக வலைதளங்களில் ரூ.4 கோடியும், கூகுள் குழும வலைதளங்களில் ரூ.17 கோடியும் பாஜக செலவிட்டுள்ளது.
அதே நேரம், முகநூலில் 3,686 விளம்பரங்களை வெளியிடுவதற்காக காங்கிரஸ் கட்சி ரூ.1.46 கோடி செலவிட்டுள்ளது. கூகுள் குழும வலைதளங்களில் 425 விளம்பரங்களை வெளியிட்டுள்ள அந்தக் கட்சி, அதற்காக செலவிட்ட தொகை ரூ.2.71 கோடியாகும்.
முகநூலில் தேர்தல் விளம்பரம் செய்ய திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.29.28 லட்சமும், ஆம் ஆத்மி கட்சி 13.62 லட்சமும் செலவிட்டுள்ளன.
பிப்ரவரி 19-ஆம் தேதியிலிருந்து கூகுள் குழும வலைதளங்களில் விளம்பரம் செய்ய ஆம் ஆத்மி கட்சி ரூ.2.18 கோடி செலவிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT