நாக்பூர்: மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றின் டயர் வெடித்து, அது டெம்போ மீது விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மகாராஷ்டிராவின் கட்ச் நகரில் இருந்து நாக்பூர் நோக்கி உப்பு ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை 6ல் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியானது மல்காபூர் என்னும் பகுதியில் வந்துகொண்டிருந்த போது திடீரென அதன் டயர் வெடித்தது. இதனை அடுத்து அந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து ஓடத்தொடங்கியது.
இதனால் அதிவேகமாக அருகில் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்றின் மீது அந்த லாரி விழுந்தது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களில் 5 பேர் பெண்கள். 3 பேர் குழந்தைகள் ஆவார்கள். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக காயமடைந்த நபர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.