இந்தியா

இந்த மாநிலத்தில் ஒரு எம்எல்ஏ-க்கு கூட குற்றப் பின்னணி இல்லையாம்!

DIN


சிக்கிம் மாநிலத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவர் மீது கூட குற்றப் பின்னணி கிடையாது என்கிற தகவல் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தலோடு சிக்கிம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் 17 பேரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் 15 பேரும் வெற்றி பெற்றனர். 

இந்த 32 சட்டப்பேரவை உறுப்பினர்களில் எந்தவொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் குற்றப் பின்னணியே இல்லை என்று அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் தெரிவித்துள்ளது. 2009-க்கு பிறகு குற்றப் பின்னணி இல்லாத உறுப்பினர்கள் சிக்கிம் சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ளது இதுவே முதன்முறை. 

சிக்கிம் சட்டப்பேரவையில் 3 பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 41 - 50 வயதுக்கிடையிலான உறுப்பினர்களே சட்டப்பேரவையில் அதிகளவில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT