இந்தியா

புதிய மக்களவையில் 475 கோடீஸ்வர எம்.பி.க்கள்

DIN

புதிய மக்களவையில் 475 எம்.பி.க்கள்,  கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
539 புதிய எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 475 எம்.பி.க்கள் கோடீஸ்வரராக உள்ளது தெரியவந்துள்ளது.  இதில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் முதலிடத்தில் உள்ளார்.
மொத்தமுள்ள 542 புதிய எம்.பி.க்களில் 3 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ய முடியவில்லை. அதில் இரண்டு பேர் பாஜகவையும், ஒருவர் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்.
பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்ட 301 புதிய எம்.பி.க்களில் 265 பேர் (88 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவ சேனை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.பி.க்களின் அனைவரின் சொத்து மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமானவை. 
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 51 எம்.பி.க்களில் 43 பேர் (96 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. 
அதேபோன்று, தி.மு.க. 23 எம்.பி.க்களில் 22 பேரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 22 பேரில் 20 பேரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 22 எம்.பி.க்களில் 19 பேரும் கோடீஸ்வரர்கள்.
கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே உள்ளனர்.
அதன்படி, மத்திய பிரதேசம் சிந்த்வாரா தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.660 கோடியாகும். இவரையடுத்து, கன்னியாகுமரியிலிருந்து  எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.வசந்த குமாரின் சொத்து மதிப்பு ரூ.417 கோடியாகவும், பெங்களூரு ஊரக தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட  டி.கே. சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.338 கோடியாகவும் உள்ளது என ஏடிஆர் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT