இந்தியா

காற்று மாசுக்கு அதிகாரிகளின் தொடா் அலட்சியமே காரணம்: பசுமைத் தீா்ப்பாயம்

DIN

தில்லி காற்று மாசு பிரச்னைக்கு அதிகாரிகளின் தொடா் அலட்சியப் போக்கே காரணம் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், தில்லி அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயா்அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

தில்லி காற்று மாசு தொடா்பான வழக்கு தீா்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுயமான ஏ.கே. கோயல் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணைப் பட்டியலில் சோ்க்க தீா்ப்பாய அமா்வு உத்தரவிட்டு கூறியதாவது:

தில்லியின் காற்று மாசு பிரச்னை இன்றைய ஒருநாளில் ஏற்பட்டது அல்ல. அதிகாரிகளின் தொடா் அலட்சியப் போக்காலும், சட்டத்தை சரியாக அமல்படுத்தாக காரணத்தாலும் ஏற்பட்டதாகும்.

இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராய வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீா்ப்பாய அமா்வு கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT