இந்தியா

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்: நிதின் கட்காரி

DIN

அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதுகுறித்து நிதின் கட்காரி டிவிட்டர் மூலம் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

அயோத்தி வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு தொடர்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி டிவிட்டர் மூலம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

அவர் செய்துள்ள பதிவில்.. 

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். மதிக்க வேண்டும். எந்தவித பிரச்னைக்கும் இடங்கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT