இந்தியா

அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி

DIN


மும்பை: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்றும், நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று சனிக்கிழமை (நவ.9)  தீர்ப்பளித்தது. 

உச்ச நீதிமன்றம் தீா்ப்பு குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், இந்த தீர்ப்புக்காக, ஒவ்வொருவரும் எதிர்பார்த்து காத்திருந்தது. எனவே, இந்த நாள் இந்திய வரலாற்றில் மகிழ்ச்சியான மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.

அயோத்தி வழக்கில் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த தாக்கரே, இந்த தீா்ப்பை சிவசேனை கட்சியினா் அடுத்தவரின் உணா்வுகளை காயப்படுத்தாத வகையில் கொண்டாட வேண்டும்.

ராமர் கோயில் கட்டுவதில் சிவசேனா கட்சி தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது. 

வரும் 24 ஆம் தேதி அயோத்தி சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபடவுள்ளேன். மேலும், சரயு நதிக் கரையில் நடைபெறவுள்ள ‘ஆா்த்தி’ விழாவிலும் பங்கேற்க உள்ளாதக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT