இந்தியா

ஜம்முவில் 500 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து: இரு குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 500 அடி பள்ளத்தில் பயணிகள் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரு குழந்தைகள்  உட்பட 16 பேர் பலியானார்கள்.

ஜம்மு காஷ்மீர் டோடா மாவட்டத்தின் மர்மட் பகுதியில் பயணிகள் வாகனம் ஒன்று செவ்வாயன்று சென்று கொண்டிருந்தது. மதியம் 3.25 மணியளவில்  திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது , அருகில் உள்ள 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து  நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT