முகப்பு
இந்தியா

சிவசேனை அமைச்சர் ராஜிநாமா எதிரொலி: பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்பு

தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த்தை பதவி விலக சிவசேனை பணித்தது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:06 PM
பகிர்:

சிவசேனை கட்சியைச் சேர்ந்த மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். 

பாஜக கூட்டணியில் இருந்து விலகினால்தான் சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த நிபந்தனையை ஏற்று தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த்தை பதவி விலக சிவசேனை பணித்தது. 

தில்லியில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த அரவிந்த் சாவந்த் இது தொடர்பாக கூறுகையில், "எனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவிட்டேன்' என்றார். அப்போது, தனது ராஜிநாமா கடிதத்தின் நகலையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இந்நிலையில், கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சரவை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →