இந்தியா

ஜெய்பூரில் 25 வகைகளைச் சேர்ந்த 1,000 பறவைகள் மர்ம முறையில் மரணம்: மக்கள் அதிர்ச்சி

DIN

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரின் துது மாவட்டத்தில் உள்ள சம்பார் ஏரியின் அருகே 20 முதல் 25 வகைகளைச் சேர்ந்த 1,000 பறவைகள் மர்மமான முறையில் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வனப்பாதுகாப்புத்துறை துணை அதிகாரி சஞ்சய் கௌஷிக் கூறுகையில்,

சம்பார் ஏரியின் அருகே 20 முதல் 25 வகைகளைச் சேர்ந்த சுமார் 1,000 பறவைகள் மர்மமான முறையில் செவ்வாய்கிழமை காலை உயிரிழந்துள்ளன. பறவைகளின் மர்ம மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அனைத்து பறவைகளின் உடல்களும் உடற்கூறு ஆய்வு செய்யப்படும். 

இந்த சம்பவத்தில் பறவைகள் வேட்டையாடப்பட முயன்றதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே ஏரித் தண்ணீரின் மோசமான தரம் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டிருக்கலாம். சம்பார் ஏரியின் தண்ணீரின் தரமும் பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT