முகப்பு
இந்தியா

காற்று மாசைக் குறைக்க தில்லியில் சுத்திகரிப்பு டவர்கள் அமைக்க முடியுமா? உச்ச நீதிமன்றம்

தலைநகரில் நிலவும் காற்று மாசைக்கட்டுப்படுத்த தில்லியில் சுத்திகரிப்பு டவர்கள் அமைக்க முடியுமா என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:08 PM
தில்லியில் காற்று மாசு
பகிர்:


புது தில்லி : தலைநகரில் நிலவும் காற்று மாசைக்கட்டுப்படுத்த தில்லியில் சுத்திகரிப்பு டவர்கள் அமைக்க முடியுமா என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

தில்லி காற்று மாசு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தில்லி அரசு செயல்படுத்தி வரும் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் காற்று மாசில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு, காற்றில் கலந்துள்ள மாசின் அளவு 5-15 சதவீதம் குறைந்துள்ளது என்று மாநில அரசு பதிலளித்துள்ளது.

இதைக் கேட்டுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தில்லியின் முக்கியச் சாலைகளில் காற்று சுத்திகரிப்பு டவர்களை அமைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →