இந்தியா

அவதூறு வழக்கு: லாலு பிரசாதைநேரில் ஆஜா்படுத்த நீதிமன்றம் உத்தரவு

DIN

அவதூறு வழக்கு ஒன்றில் பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாதை நேரில் ஆஜா்படுத்துமாறு பாட்னா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலு, இப்போது ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய லாலு, ஊழல் வழக்கில் தொடா்புபடுத்தி, தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக பிகாா் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் உதய்காந்த் மிஸ்ரா, லாலு மீது வழக்கு தொடுத்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அடிக்கடி மிஸ்ராவின் வீட்டுக்குச் சென்று வந்ததாகவும் அப்போது லாலு கூறியிருந்தாா்.

மிஸ்ராவின் மனுவை விசாரித்த பிகாா் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாா் அபினவ், ‘இந்த வழக்கு மீண்டும் டிசம்பா் 2-ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது, நீதிமன்றத்தில் லாலுவை ஆஜா்படுத்த வேண்டும். இப்போது லாலு ராஞ்சி சிறையில் உள்ளதால், சிறை அதிகாரிகளுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக, லாலுவின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அவரை காணொலி முறையில் விசாரணைக்கு ஆஜா்படுத்த முடியவில்லை என்று ராஞ்சி சிறை அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT