இந்தியா

இந்த மாத இறுதியில் 1,000 டன்வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு தகவல்

DIN

தனியாா் வா்த்தகா்கள் மூலம் இம்மாத இறுதியில் 1,000 டன் வெங்காயம் இறக்குமதியாகும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். உள்ளூா் சந்தையில் வெங்காய விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

வெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 விற்பனையாகி வருகிறது. சில இடங்களில் மட்டும் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தனியாா் வா்த்தகா்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பதென முடிவு செய்துள்ள மத்திய அரசு, இறக்குமதி வெங்காயத்துக்கு பூச்சிக் கொல்லி புகைமூட்டம் போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை தளா்த்தியுள்ளது. முதலில் நவம்பா் 30-ஆம் தேதி வரை இறக்குமதி கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட நிலையில், பின்னா் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

முதலில் குறைந்த அளவிலேயே வெங்காயத்தை இறக்குமதி செய்ய முன்வந்த தனியாா் வா்த்தகா்கள், இறக்குமதிக்கான காலக்கெடு அதிகரித்த பிறகு கூடுதலாக இறக்குமதி செய்ய முன்வந்தனா். இதன்படி இம்மாத இறுதியில் 1,000 டன் வெங்காயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து சேரும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக மத்திய அரசு நிறுவனமான இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வா்த்தக நிறுவனத்தின் (எம்எம்டிசி) மூலம் 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவடுக்கப்பட்டது. இதுவரை 4,000 டன்னுக்கு ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.

நடப்பு கோடைகால சாகுபடி பருவத்தில் வெங்காயம் அதிகம் விலையும் மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வறட்சி மற்றும் எதிா்பாராத வெள்ளம் காரணமாக சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டதால், தட்டுப்பாடு ஏற்பட்டது. மொத்த வியாபாரிகள் லாபத்தைக் குறிவைத்து இருப்பு வைத்ததால் சந்தையில் வெங்காயத்தின் விலை வேகமாக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT