முகப்பு
பிரதமர் மோடி
இந்தியா

மூன்று ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கான விமான செலவு மட்டும் ரூ.255 கோடி!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்துக்கான விமான செலவு மட்டும் ரூ.255 கோடி என்று

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:14 PM
பிரதமர் மோடி
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்துக்கான விமான செலவு மட்டும் ரூ.255 கோடி என்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவு விவகாரத் துறை இணை அமைச்சர் முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், விமானச் செலவாக 2016-17ம் ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18ம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2018 - 19ம் ஆண்டில் ரூ.79.91 கோடியும் செலவிடப்பட்டிருப்பதாகவும், 2019 - 20ம் ஆண்டுக்கான விமானக் கட்டணத் தொகை இன்னும் தெரியவரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தையும் இந்திய விமானப் படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் கட்டணமின்றி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →