வருகைப் பதிவுக்காக பெற்ற கையெழுத்துகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது: தேசியவாத காங்கிரஸ்
மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பாட்னாவிஸ்-ஐ ஆட்சியமைக்க அழைத்திருப்பதன் மூலம் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பாட்னாவிஸ்-ஐ ஆட்சியமைக்க அழைத்திருப்பதன் மூலம் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பிற கட்சியினரை ஆட்சியமைக்க அழைத்த போது, அவர்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் அளிக்காத ஆளுநர் கோஷ்யாரி, தற்போது பெரும்பான்மை பலத்தைக் கூட கேட்காமல், பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து, பதவியேற்க வைத்திருப்பது குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், தேசிய வாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தின் போது வருகைப் பதிவுக்காக பெறப்பட்ட கையெழுத்துகளை தவறாகப் பயன்படுத்தி துணை முதல்வராகியுள்ளார் அஜித் பவார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவை ஆதரிப்பது என்பது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அதற்கு தேசிய வாத காங்கிரஸ் கட்சி உடன்படாது என்று அக்கட்சித் தலைவர் ஷரத் பவார் டிவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.