இந்தியா

ஜனநாயகப் படுகொலைக்கு மத்தியில் கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது: நாடாளுமன்றத்தில் ராகுல்

DIN

ஜனநாயகப் படுகொலைக்கு மத்தியில் கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், திங்கள்கிழமை தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழல்கள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். இதையடுத்து இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக இரு அவைகளின் தலைவர்களும் உத்தரவிட்டனர்.

இதனிடையே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா, மகாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். 

இந்நிலையில், மகாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மக்களவையில் பேசுகையில்,

மக்களவையில் ஒரு முக்கிய கேள்வியை எழுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது உள்ள சூழலில், அதுவும் மகாராஷ்டிரத்தில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ள இந்த நேரத்தில் அந்த கேள்வியை எழுப்புவது எந்த விதத்திலும் சரியாக இருக்காது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT