மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்: ஆட்சியமைக்க உரிமை கோரியது சிவசேனை
மகாராஷ்டிர ஆளுநருடன் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மும்பை: மகாராஷ்டிர ஆளுநருடன் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி மூன்று கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் தந்தன.
தற்போது மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு சிவசேனை கூறியுள்ளது.
அதே சமயம், பாஜக அரசுக்கு ஆதரவு இல்லை என்று மூன்று கட்சிகளுமே தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.