இந்தியா

மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவி?

DIN


மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராகவும், மகாராஷ்டிர முதல்வராகவும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டு வந்தது. அதேபோல் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர்கள் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனைக்கு முதல்வர் பதவி தவிர 15 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படவுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் 13 அமைச்சர்கள் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, உத்தவ் தாக்கரே நாளை முதல்வராகப் பதவியேற்கும்போது அவருடன் இணைந்து 40 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT