உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு? பிரதமர் மோடி அழைப்பு குறித்து சஞ்சய் ரௌத் முக்கிய தகவல்
மும்பை சிவாஜி பூங்காவில் நவம்பர் 28-ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சிவசேனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக உத்தவ் தாக்கரே தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை இரவு உரிமை கோரினாா்.
மும்பை சிவாஜி பூங்காவில் நவம்பர் 28-ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சிவசேனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத், புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உட்பட அனைவரும் அழைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.